விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: நால்வர் காயம்


விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: நால்வர் காயம்

முன்னாள் பெண்புலி உறுப்பினர்

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நெவார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 2664-ல் பயணித்த பயணி ஒருவரின் மடிக்கணினி திடீரென தீப்பிடித்தது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மடிக்கணினியிலிருந்து பரவிய தீயை அணைக்க முயன்ற 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

இதனால், விமானம் மீண்டும் சான் டியாகோ விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விமானம் சான் டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமானப் பணியாளர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மடிக்கணினி பேட்டரியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை விரிவாக விசாரித்துவருவதாகவும் கூறியுள்ளது.