விமானத்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து (வீடியோ)


விமானத்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து (வீடியோ)

ரயில் பாதையின் மீது அவசரமாக தரையிறக்கப்பட்ட இலகுரக விமானம் ஒன்றின் மீது கடுகதி ரயில் ஒன்று மோதும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்த விபத்து அமெரிக்காவின், லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரயில் தண்டவாளத்தின் மீது அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானத்தின் மீதே, ரயில் மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு, ஒரு சில நொடிகளிலேயே விமானத்தின் மீது அதிவேக ரயில் மோதியுள்ளது.