விலை அதிகரிக்கப்பட்ட மேலும் சில பொருட்கள்


விலை அதிகரிக்கப்பட்ட மேலும் சில பொருட்கள்

பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலைகள் 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.

டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அரிசியை பொதியிடப் பயன்படுத்தும் பை ஒன்றின் விலையை 35 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரிசி பை உற்பத்தியார்கள் முன்னர் அறிவித்தனர்.