விஷேட ரயில்களை சேவை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


விஷேட ரயில்களை சேவை

வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு விஷேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 16 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானையிலிருந்து கண்டி, தெற்கு களுத்துறை, வேயாங்கொடை, அளுத்கமை, அனுராதபுரம், அவிசாவளை மற்றும் ரம்புக்கன ஆகிய புகையிரத நிலையங்கள் வரை விஷேட ரயில்கள் சேவையில் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.பி. ஆரியரட்னவின் ஆலோசனைப்படி இந்த விஷேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

(அத தெரண)