வெட்வரித் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள கம்மன்பில

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வெட்வரித் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள கம்மன்பில

பெறுமதிசேர் வரித் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் 4,13,17 மற்றும் 18வது பிரிவுகள் அரசியலமைப்பின் 3,4 மற்றும் 12 (1), 14(1) ஆகிய பிரிவுகளுடன் முரண்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த மனுவின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கும் வரை, பெறுமதி சேர் வரிச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளது முடியாது என, கம்மன்பிலவின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.