வெற்றி நமக்கு புதிதல்ல: விராட் கோஹ்லி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வெற்றி நமக்கு புதிதல்ல: விராட் கோஹ்லி

இந்தியாவின் டெஸ்ட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி எங்கு விளையாடினாலும் ஜெயிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்திய அணி மேற்கிந்திய தீவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

போட்டி முடிவுக்கு பின்னர் கோஹ்லி அளித்த பேட்டியில் கூறியதாவது:மேற்கிந்திய தீவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த வரும் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் இருக்க மாட்டோம்.

முதல் போட்டியில் என்ன நடந்திருந்தாலும், அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டோம்.

அடுத்து வரும் போட்டிகளில் எவ்வாறு செயல் படுவது என்பது குறித்து திட்டமிடுவோம்,அப்போது தான் வரும் போட்டிகளில் வென்று தொடரை 4-0 என்ற முறையில் கைபற்ற முடியும்.

மேலும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்வது ஒன்றும் புதிதல்ல,இங்கு வெற்றி பெற முடியும் என்றால்,நாம் எங்கு விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.