வெளிநாடு செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வெளிநாடு செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை சுதந்திர கட்சியின் 65ஆம் நிறைவு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளமாட்டார் என தெரியவந்துள்ளது.

குறித்த நிகழ்வு இடம் பெறும் தினத்தன்று தான் வெளிநாட்டு பயணம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று நீர்கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதான ஒரு அரசியல் சக்தியினை உருவாக்குதல் நிமித்தம் மஹிந்த விரைவில் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சாதகம் உள்ளதாகவும், அதே சமயம் தான் இலங்கை சுதந்திர கட்சியிலேயே போட்டியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.