வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்

நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு 10.20 மணியளவில் பிரதமர் தரையிறங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு சென்றார்.

இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய ஜனாதிபதி பிரானாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.