இன்று (15) நண்பகல் 12 மணி முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி புகையிரத இயக்குநர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பு கோட்டைக்கு வந்த சில தொடருந்து அதே இடத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடருந்து இயக்குநர்களின் பணிநிறுத்தம் தொடர்பில் அறிந்திராத நீண்ட தூரப் பயணிகள், பயணங்களை மேற்கொள்ள முடியாமல் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் 12 மணி முதல் தொடருந்து சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.