மீண்டும் வைத்தியர் சாபிக்கு எதிராக கோஷமிடும் ரத்ன தேரர்


மீண்டும் வைத்தியர் சாபிக்கு எதிராக கோஷமிடும் ரத்ன தேரர்

கட்டாய விடுமுறையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளரை பணி நீக்கம் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பாததற்காக முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

வைத்தியர் சாபி ஷிஹாப்தீன் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை என்றும் அத்துரலியே ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.