வௌிநாடு செல்ல முடியாமல் போனதால் நடிகையான நடிகை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வௌிநாடு செல்ல முடியாமல் போனதால் நடிகையான நடிகை

பல்வேறு விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தீக்ஷிதா. சென்னையில் வசிக்கும் தமிழ், பெண்ணான இவர். ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகி ஆகி இருக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் இர்பான். இவரது ஜோடியாக தீக்ஷிதா அறிமுகம் ஆகிறார். வெளிநாட்டு மோகத்தை கைவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் ‘ஆகம்’ படத்தை விஜய் ஆனந்த் ஸ்ரீராம் எழுதி, இயக்கி தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க வந்து குறித்து தீக்ஷிதா விடம் கேட்ட போது….

‘இது நமது நாட்டில் பிறந்து நமது அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்து விட்டு, வெளிநாட்டில் வேலை தேடி சென்று தன்னுடைய அறிவை வெளி நாட்டுக்கு விற்பவர்களை பற்றியக் கதை. நான் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் பயின்றவள் தான். என் சக மாணவர்களைப் போலவே எனக்கும் கல்வி முடிந்தவுடன் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு எனது பெற்றோர்கள் தடையாக இருந்தனர் .

இதற்காக நான் முதலில் சிறிது வருத்தப்பட்டேன். இன்று ‘ஆகம்’ படத்தின் கதையை கேட்டு இந்த படத்தில் நடித்த பிறகு எனது பெற்றோரின் முடிவு சரியானதுதான் என்றுத் தோன்றுகிறது. ‘ஆகம்’ வெளி வந்தப் பின்னர் என்னுள் ஏற்பட்ட மாற்றம் படம் பார்க்கும் எல்லோருக்கும் தோன்றும்.

‘ஆகம் ‘ படத்தில் நான் மிகவும் இயல்பான ஒரு வேடத்தில் நடித்து இருக்கிறேன். இந்தப் படத்தில் அனுபவமிக்க சில நடிகர்களுடன் நடித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

கதாநாயகன் இர்பான் எனக்கு பல நாட்களாகவே பழக்கமானவர். அவருடைய நடன திறமைக்கும், நகைசுவை உணர்ச்சிக்கும் அவர் இன்னமும் உயரத்துக்கு அவர் செல்வார் .

இந்த படத்தின் மூலம் இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் ஆனந்த் ஸ்ரீராம் சார், இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்’ என்றார்.