​வௌிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட பெண்கள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


​வௌிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட பெண்கள்

வௌிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி மாதக்கணக்கில் விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த பத்துப் பேர் வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் மீட்கப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் ஏழு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களும் மருதானை பகுதியிலுள்ள குறித்த விடுதியில் இருந்து இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி மற்றும் சவுதியில் வேலை பெற்றுத் தருவதாக கூறியே அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தாக, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மருதானை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தகவல் – அத தெரண