ஶ்ரீலசுக யின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் எச்சரிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஶ்ரீலசுக யின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவின் எச்சரிக்கை

இந்தமுறை காலியில் இடம்பெறவுள்ள மேதின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

கட்சியில் இருந்து கொண்டு ஒழுக்கத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை குறித்து ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவிப்பதாக அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அதன்படி கட்சியின் யாப்பிற்கு மாறாக செயற்படுவோருக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

காலியில் இடம்பெறவுள்ள மேதின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஒரு சிலர் வௌியிடும் கருத்துக்களால், அவர்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு விருப்பமில்லை என்பது தௌிவாகிறது என்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

(அத தெரண)