ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஸ்டாலின் கொடுத்த ஷாக்!

திமுக ஆட்சி அமைத்தால் கூட்டணிக்கு கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்று சென்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரசாரம் செய்வதற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத காரணத்தால், திமுக மீது மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் நலக் கூட்டணியை பிரிக்க திமுக முயற்சிப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை, தமிழக அரசின் தவறுகளை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் பலிகாடாக ஆக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, திமுக ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புண்டா? என்ற கேள்விக்கு, வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.