பொதுச் செயலாளர் தயாசிறியை நீக்குவதற்கு மத்திய செயற்குழுவில் யோசனை முன்வைப்பு!


பொதுச் செயலாளர் தயாசிறியை நீக்குவதற்கு மத்திய செயற்குழுவில் யோசனை முன்வைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்காக எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸவை அந்த பதவிக்கு நியமிப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கமைய மத்திய செயற்குழு விரைவில் கூட்டுமாறு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதற்கு அதன் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது வெளிநாட்டில் உள்ளதுடன் அவர் மீள நாடு திரும்பியவுடன் இதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.