ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக கோட்டா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக கோட்டா

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய, கொலன்ன தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

(அத தெரண)