ஜனாதிபதியிடம் கடுமையாக திட்டு வாங்கிய ஹரின் பெர்ணான்டோ


ஜனாதிபதியிடம் கடுமையாக திட்டு வாங்கிய ஹரின் பெர்ணான்டோ

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஜனாதிபதி கோட்டாபயவிடம் கடுமையான வார்த்தைகளால் திட்டு வாங்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வீண் பேச்சுகள், இடத்துக்கிடம் ஒவ்வொரு விதமாகப் பேசித் திரிதல் போன்றவற்றை தவிர்த்துவிட்டு அமைச்சின் அலுவல்களில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கடுமையான தொனியில் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான கடந்த அமைச்சரவை பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியடைய இதுபோன்ற செயற்பாடுகளும் காரணமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நல்ல பிள்ளையாக வாய் திறக்காது மெளனமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தான் பெரும் அதிருப்தியுடனேயே அமைச்சுப் பதவியை பொறுப்பெடுத்துள்ளதாகவும், தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு

அமைச்சுப் பதவி பெற்றபின் ஹரின் பெர்ணான்டோ வௌியிட்ட முக்கிய அறிவிப்பு