ஹிருணிகாவின் கடத்தல் விவகாரம்; விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஹிருணிகாவின் கடத்தல் விவகாரம்; விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம்

தெமட்டகொட பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்புரை படி தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரவினரால் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட டிபெண்டர் ரக வாகனம் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது என முன்னதாக தெரியவந்தது.

இந்நிலையில் ஹிருணிகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சட்டமாக அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

சட்டமா அதிபரின் பணிப்புரை படி கொழும்பு குற்றத் தடுப்பு பிரவினரால் சம்பவத்துடன் தொடர்புடைய சில நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவர் மற்றும் கடத்தப்படும் இடத்தில் இருந்த அவர்களின் 11 வயது மகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிக்கையை இன்று சட்டமா அதிபரிம் கையளித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

(அத தெரண தமிழ்)