ஹிலாரிக்கு வாக்களிப்பவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்; பிரபல நடிகை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஹிலாரிக்கு வாக்களிப்பவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன்; பிரபல நடிகை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு வாக்களிப்பவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள இருப்பதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரபல நடிகை மடோனா.

அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஹிலாரியின் கை ஓங்கியிருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஹிலாரிக்கு வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளார் பிரபல அமெரிக்க நடிகையும், பாப் பாடகியுமான 58வயது மடோனா.
நேற்று முன்தினம், நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மடோனா, ரசிகர்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது அவர், “ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி வாய்ப்பை அளிக்கப் போகிறேன். குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டிரம்பை தோற்கடித்து ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால், இயற்கைக்கு மாறான முறையில் கூட அவர்களுடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பேன்’ என அதிரடியாக அறிவித்தார்.
மடோனாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.