ஹெட்டனிலிருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம்புரண்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (05.02.2023) பதிவாகியுள்ளது.
குறித்த தொடருந்து தலவாக்கலைக்கும், வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் வைத்தே தடம்புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தொடருந்து தடம் புரண்டுள்ளமையால் மலையக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.