09 ம் திகதி வன்முறை முன்னரே திட்டமிடப்பட்டது – அமைச்சரின் பரபரப்பு தகவல்


09 ம் திகதி வன்முறை முன்னரே திட்டமிடப்பட்டது – அமைச்சரின் பரபரப்பு தகவல்

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக அமைச்சர் தினேஷ குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே ட்ரோன் கமரா மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கும்பலின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் ஆபத்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை காரணமாக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான இளைஞர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைக்கு செல்லும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இந்த குழுவினரையும் அவர்களை இயக்கும் தலைவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 30 வீதமான இளைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தனது பாரம்பரிய வீட்டுக்கு வன்முறைக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதன் காரணமாக 100 வருட பழமையான நூலகம் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

காலி முகத்திடலில் அதிக பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டது ஏன்?