100​ கோடி பவுன் செலவில் பிறந்தநாள் கொண்டாட்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


100​ கோடி பவுன் செலவில் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரித்­தா­னிய மகா­ரா­ணியின் 90 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் 100 கோடி பவுண்களை (இலங்கை ரூபா­வில் 20,008 கோடி­) தாண்டும் என ஆய்வின் மூலம் தெரி­ய­­வந்­துள்­ளது.

பிரித்தா­னி­ய மகா­ராணி எலிசபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21 ஆம் திகதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11 ஆம் திகதியும் பிரித்தா­னி­யா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

மகா­ரா­ணி­யின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகா­ரா­ணி­யின் பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக ஒவ்வொரு பிரித்­தா­னி­ய பிரஜையும் 42.98 பவுண்செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக 20 பவுண் செலவிட உத்தேசித்துள்ளனர்.

இதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக சுமார் 100 கோடி பவுண் செலவிட உள்ளதாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.