100 ரூபா கொடுக்காததால் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பெண்


100 ரூபா கொடுக்காததால் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பெண்

இரத்தினபுரி, எலபாத்த, மஹிரகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

எலபாத பிரதேசத்திலிருந்து வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தே நபர், குறித்த பெண்ணிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார். எனினும் அதனை கொடுக்க மறுத்ததன் காரணமாகவே குறித்த பெண்ணை மூன்று இடங்களில் குத்தியதாக சந்தேக நபர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.