12 தமிழ் அரசியல் கைதிகளின் விளக்கமறியல் நீடிப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


12 தமிழ் அரசியல் கைதிகளின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் 12 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், மே மாதம் 4 ஆம் திகதி வரை அரசியல் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், அவர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.