12 வயது சிறுமியை விலைக்கு வாங்கி குடும்பம் நடத்திய 40 வயது காமுகன்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


12 வயது சிறுமியை விலைக்கு வாங்கி குடும்பம் நடத்திய 40 வயது காமுகன்

வியட்நாமை சேர்ந்த 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை சீனாவில் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் வைத்தியசாலை ஒன்றுக்கு 40 வயது மதிக்கத்தக்க நபரொருவருடன் வந்த 12 வயது சிறுமியின் வயிறு பெரியதாக இருந்துள்ளதுடன், மேலும் அவரது வயிற்றில் சில காயங்களும் இருந்துள்ளது.

அச்சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள்,குறித்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதோடு அச்சிறுமியின் கரு ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் குழந்தையாகிய இவள் கருவுற்றிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என கருதி வைத்தியசாலைக்கு பொலிஸாரை வரவழைத்துள்ளனர்.

இதையறிந்த அச்சிறுமியின் கணவரான 40 வயது மதிக்கத்தக்க நபர், நீங்கள் தேவை இல்லாத கேள்விகளை எழுப்புகிறீர்கள், அவளை சோதனை மட்டும் செய்தால் போதும், எனது தனிப்பட்ட விடயத்தில் தலையிட தேவையில்லை என வைத்திய ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடத்தியதில், அச்சிறுமி சீன நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்றும் வியட்நாமிலிருந்து விலைக்கு வாங்கி குறித்த நபர் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அந்நபரை கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.