2 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் கடத்திய இராணுவ அதிகாரி கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


2 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் கடத்திய இராணுவ அதிகாரி கைது

இந்தியாவின் வட-கிழக்கில் மிஸோரம் மாநிலத்தில் நடந்துள்ள தங்கக் கடத்தல் நடவடிக்கை தொடர்பில் இராணுவ கர்ணல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரிலிருந்து இந்தியாவுக்கு 50க்கும் அதிகமான தங்கக் கட்டிகளை கொண்டுவந்த கார் ஒன்றை அந்த இராணுவ கர்ணல் அதிகாரியும் சில இளநிலை அதிகாரிகளும் வழிமறித்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தக் காரிலிருந்த தங்கக் கட்டிகளை எடுத்துக் கொண்ட அதிகாரிகள், தன்னை அமைதியாக சென்றுவிடும்படி எச்சரித்ததாக காரில் இருந்த கடத்தல்காரர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தத் தங்கக் கட்டிகள் இரண்டு மில்லியன் டாலருக்கும் அதிக பெறுமதியானவை என்று கூறப்படுகின்றது.

தங்கத்தை கடத்தி வந்தவரிடமும் விசாரணை நடந்துவருகின்றது.