இவ்வருடத்துக்கான பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

தமிழ் ​செய்திகள் இன்று

இவ்வருடத்துக்கான பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான பாடசாலைப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, க.பொ.த. உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் செயன்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 20 முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியும், உயர் தர சாதாரண தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியும் இடம்பெறும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலும், அதன் செயன்முறைப் பரீட்சைகள் 2018 ஆம் ஆண்டு பெப்ருவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.