இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை

இலங்கை அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற 20க்கு இருபது போட்டியில் ஒழுக்க மீறல் இடம்பெற்றதாக கூறியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் நிரோஷன் நடுவரின் தீர்ப்பை விமர்சித்தாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அவர் நாளை இடம்பெறவுள்ள 20க்கு இருபது மற்றும் அதற்கு அடுத்தாக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.