சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை தவறானது – நாமல் ராஜபக்ச

தமிழ் ​செய்திகள் இன்று


சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை தவறானது – நாமல் ராஜபக்ச

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சரத்பொன்சேகாவுக்கு அரசியல் ரீதியில் தண்டனை விதிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவிற்கு தண்டனை வழங்கப்படாதிருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்