ஜெய்சங்கர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


ஜெய்சங்கர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வௌியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஜெய்சங்கர் இலங்கை வந்தார்.

மேலும், நேற்றையதினம் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரையும் சந்தித்துள்ளார்.