16 கிலோ போதைப் பொருளுடன் 65 வயது நபர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


16 கிலோ போதைப் பொருளுடன் 65 வயது நபர் கைது

கண்டி பகுதியிலிருந்து பொகவந்தலாவிற்கு பேருந்தில் கொண்டு வரப்பட்ட புகையிலை தூள் அடைக்கப்பட்ட 16 கிலோ என்சி பைக்கற்றுகளுடன் பொகவந்தலாவ பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) மாலை பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருள் பைக்கற்றுகள், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளதோடு,
குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பைக்கற்றில் 400 கிராம் வீதம் 40 பக்கட்கள் இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்காகக்கொண்டு, இவ்வகையான போதைபொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (21) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.