திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேர் வைத்தியசாலையில்

தமிழ் ​செய்திகள் இன்று


திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேர் வைத்தியசாலையில்

ஆரையம்பதி-கோவில்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையின் காரணமாக சுமார் 30 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.