நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – புதிய அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடு பூராகவும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை முன்னர் போன்று இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாவதனால், அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு நேற்று மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.