08ம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்

தமிழ் ​செய்திகள் இன்று


08ம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பும்

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பேருந்து மற்றும் தொடருந்து முதலான பொதுப்போக்குவரத்தை வழமையான முறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கிடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இயன்றளவு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலை சேவைகள், சுற்றுலாவிற்காக பயன்படுத்தப்படும் பேருந்துக்கள் என்பவற்றை தற்காலிகமாக பொது போக்குவரத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.