அமெரிக்க பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவர் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்

தமிழ் ​செய்திகள் இன்று


அமெரிக்க பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவர் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்

அமெரிக்காவில் அண்மையில் பொலிஸாரின் தாக்கு தலுக்கு இலக்காகி உயிரிந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவர் உயிரிழந்தார்.

அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், அவரை பொது இடத்தில் வைத்து கழுத்தின் மீது காலால் இருக்கி தாக்குதல் நடத்தி கொலை செய்தனர்.

இதனையடுத்து அந்த நபர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதுடன், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைதொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள கருப்பின மக்கள் வெகுண்டெழுந்து ஒரு வாரகாலத்திற்கும் அதிகமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியானது அமெரிக்க மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.