அரசாங்கம் மறைக்காமல் வௌிப்படுத்த வேண்டும்

தமிழ் ​செய்திகள் இன்று


அரசாங்கம் மறைக்காமல் வௌிப்படுத்த வேண்டும்

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத போது, பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்படாது, அரசாங்கம் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.

அதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பதை போன்று எவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிப்படையாத வகையில் தேர்தலை நடத்த வேண்டும்.

இதேவேளை, வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் மொத்த தேசிய உற்பத்தியில் 9 வீதமே வருமானம் கிடைத்துள்ளது.

ஆகவே வரவினை விட செலவே அதிகரித்துள்ளது.

இதனை அரசாங்கம் மறைக்காது வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மறைப்பதால் பொதுமக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.

ஆகவே அதனை வெளிப்படுத்துவதால் அதனை எவ்வாறு சமாளிப்பது குறித்து சிந்திக்க முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.