தர்காநகர் முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குமார் சங்கங்காகர

தமிழ் ​செய்திகள் இன்று


தர்காநகர் முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குமார் சங்கங்காகர

அளுத்கம தர்காநகர் பிரதேசத்தில் அண்மையில் பொலிஸாரால் முஸ்லிம் சிறுவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்க ஓர் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது அனுமதிக்கப்படக்கூடியதல்ல எனவும் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.