புகைப்படம் எடுக்க பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்ற கனடா பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தமிழ் ​செய்திகள் இன்று


புகைப்படம் எடுக்க பௌத்த மத்திய நிலையத்திற்கு சென்ற கனடா பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காலி, களுவெல்ல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புகைப்படம் எடுக்க வந்த கனேடிய பெண்ணுக்கு புகைப்படம் எடுக்க உதவுவது போன்று நடித்து அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த பெண் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடமும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்திலும் முறைபாடு செய்துள்ளார்.

அவரிடம் இருந்த புகைப்படம் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.