மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் கொரோனாவால் உயிரிழப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் கொரோனாவால் உயிரிழப்பு

உலகம் முழுவதும் பெருகிவரும் கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சில கிரிக்கெட் வீரர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

அதன்படி ஏற்கனவே கொரோனா தொற்று இருப்பதாக மஜீத் ஹக் (ஸ்காட்லாந்து வீரர்), ஜாபர் சர்பராஸ் (பாகிஸ்தான்) மற்றும் சோலோ ந்கவேணி (தென்னாப்பிரிக்கா) ஆகியோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரிஹாஸ் செய்க் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது பாகிஸ்தான் அணி வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

51 வயதாகும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார்.