வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாய திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாய திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் சில பாகங்களில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள், தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டால், அது குறித்த உடன் அறிவிக்குமாறு அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதற்கமையை, 1920 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து விவசாயிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வட மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் சிவபாதம் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் விவசாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள வெட்டுக்கிளிகள் இலங்கையிலும் சில பிரதேசங்களில் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.