அமெரிக்காவில் மற்றொரு நபர் மீது பொலிஸார் கொடூர தாக் குதல் – வீடியோ

தமிழ் ​செய்திகள் இன்று


அமெரிக்காவில் மற்றொரு நபர் மீது பொலிஸார் கொடூர தாக் குதல் – வீடியோ

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளோய்டைப் போல மற்றுமொருவர் மீது பொலிஸார் கொடூரத் தாக் குதல் நடத்திய காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மீண்டும் இந்த தாக் குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

நிவ்யோர்க்கில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினிடையே 75 வயது வயோதிப நபரை தடியொன்றின் உதவியில் கீழே தள்ளிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவர்மீது சரமாரி தாக் குதலை நடத்தினர்.

இந்த தாக் குதலை அப்படியே காணொளியாக பதிவுசெய்த ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை, விசாரணைகளையும் நிவ்யோர்க் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வீடியோவை கீழே காணலாம்.