அலி சப்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு – தேசியப் பட்டியல் வழங்க கூடாது

தமிழ் ​செய்திகள் இன்று


அலி சப்ரிக்கு வலுக்கும் எதிர்ப்பு – தேசியப் பட்டியல் வழங்க கூடாது

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கக் கூடாது என்று புதிய சிங்கள ராவய அமைப்பு கூறியுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பகல் ஊடக சந்திப்பை நடத்திய அந்த அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து கூறிய அவர்,

அண்மையில் அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்த கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்த மெடில்லே பஞ்ஞாலோக்க தேரருக்கெதிராக சட்டத்தரணி 150 கோடி ரூபாவை கோரி நோட்டீஸ் விடுத்திருக்கின்றார்.

இது பௌத்த தேரர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவால் என்பதோடு பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆகவே ஜனாதிபதி தலையீடு செய்து சட்டத்தரணி அலிசப்ரிக்கு வழங்கவிருந்த தேசியப்பட்டியல் சந்தர்ப்பத்தை பறித்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.