ஈஸ்டர் தாக் குதல் வெடிகுண்டடை கொழும்பில் இருந்து ​பஸ்ஸில் எடுத்துச் சென்ற குண்டுதாரி

தமிழ் ​செய்திகள் இன்று

ஈஸ்டர் தாக் குதல் வெடிகுண்டடை கொழும்பில் இருந்து ​பஸ்ஸில் எடுத்துச் சென்ற குண்டுதாரி

2019 ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவஸ்தானத்தில் நடத்தப்பட்ட குண்டு தாக் குதல் சம்பந்தமாக பல புதிய தகவல்கள் விசாரணைகளில் வௌிவந்துள்ளன.

தாக் குதல் நடத்துவதற்கான வெடிகுண்டு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பஸ்ஸில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரான மொஹமட் அசாத் என்ற நபர் மருதானை, ஸாஹிரா கல்லூரிக்கு அருகில் இருந்து கல்முனை – கொழும்பு பஸ்ஸில் மட்டக்களப்பு நோக்கி சென்றுள்ளார்.

சம்பவத்திற்கு முந்தையநாள் 2019. 04.20ம் திகதி இரவு 08.51 மணிக்கு பஸ்ஸில் ஏறும் சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.

கல்முனையில் இருந்து சியோன் தேவாலயத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சென்ற அவர் முதலில் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபடும் காட்சிகளும் வௌியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து பள்ளிவாசலில் இருந்து சியோன் தேவாலயத்துக்குச் சென்ற அவர் சம்பவ தினமான 21ம் திகதி காலை 09.03 மணிக்கு குண்டை வெடிக்க செய்துள்ளார்.

தாக் குதல் நடத்துவதற்கான வெடிகுண்டு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பஸ்ஸில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.