தர்காநகர் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – மூன்று பொலிஸார் இடைநிறுத்தம்

தமிழ் ​செய்திகள் இன்று


தர்காநகர் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – மூன்று பொலிஸார் இடைநிறுத்தம்

அளுத்கம, தர்காநகர் பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம் சிறுவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறினார்.

குறித்த தினத்தில் பொலிஸ் ஊரடங்கு சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அளுத்கம – தர்கா நகர் பகுதியில் ஒஸ்டிசம் குறைப்பாடுடைய 14 வயதான சிறுவர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

நோன்பு பெருனாள் தினத்தன்று மிதிவண்டியில் பயணித்த வேளையில் அவர் காவற்துறை சோதனை சாவடி ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான CCTV காணொளி பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதற்கு குமார் சங்கக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.