புத்த மதத்தின் போதனையின் அடிப்படையில் கொரோனா வெற்றிப் பாதையில் இலங்கை

தமிழ் ​செய்திகள் இன்று


புத்த மதத்தின் போதனையின் அடிப்படையில் கொரோனா வெற்றிப் பாதையில் இலங்கை

புத்த மதத்தின் போதனையின் அடிப்படையில் உரிய பண்புகளையும் சடங்குகளையும் பின்பற்றியதால் இலங்கை கொரோனாவை வெற்றி கொள்ளும் பாதையில் பயணிப்பதாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொசொன் றோன்மதி தின வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப் பின்பற்றியமையினாலும் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது.

தேசத்தை நாகரிகமடையச் செய்த முதிர்ச்சியடையச் செய்த தேசத்தை முன்னேற்றி பாதுகாத்த புத்த மதத்திற்கு அடிப்படையாக அமைந்த புனித பொசொன் போயா தினம் இம்முறை இரண்டாயிரத்து முன்னூற்றி இருபத்தியெட்டாவது தடவை பிறக்கிறது.

இந்த தர்மவிஜய செய்தியுடன் அறியாமையினால் மங்கிப் போயிருந்த சிங்கள தீபம் சத்தியத் தத்துவம் காரணமாக பிரகாசம் பெற்று ஒளிவீசத் தொடங்கியது.

அதன் மூலம் குறுகிய காலத்தில் தூய கலாசாரத்தையும் கொண்ட நாகரிக மடைந்த தேசமாகமாற்றமடைந்தது.

அதன் பிரதிபலனாக இந் நாட்டை ஒற்றுமைப்படுத்திய சிரேஷ்ட இளவரசர்கள், தீரமிகு தளபதிகள், காட்டிலிருந்த பாரிய கருங்கல்லில் அன்பு, கருணை, மன அமைதி போன்ற உயர்ந்த பண்புகளையும் சேர்த்துச் செதுக்கிய வியப் பூட்டும் கலைஞர்கள், இயற்கையின் அழகை சொற்களில் வடித்த கவிஞர்கள் போன்றோர் இந்நாட்டை செழுமைப்படுத்தினர்.

இம்முறை பொசொனின் பிறப்புடன் உலக சுற்றாடல் தினமும் அதேதினத்தில் கொண்டாடப்படுகிறது. எமது மூதாதையரின் முழு உடம்பிலும் ஒன்றித்துப்போயிருந்த இந்த சிரேஷ்ட தத்துவம் காரணமாக உயிரினங்கள் உட்பட இயற்கையின் அனைத்து அம்சங்கள் மீதும் நிதமும் அன்பு செலுத்தி, அவற்றைப் பாதுகாக்கின்ற பலமான தேசமொன்று தோற்றம் பெற்றது.

இன்று அதற்கு மாறாக நடந்துகொண்டமையினால் முழு உலகும் மீண்டும் தம்மை சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும் என்பதே கொவிட் – 19 தொற்று எடுத்துக்கூறும் முக்கிய பாடமாகும். நாமனைவரும் நாடு என்றவகையில் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும்,

புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப் பின்பற்றியமையினாலும் இலங்கை அத்தொற்றுநோயை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது.

இன்னும் சிறிய காலப்பகுதிக்குசுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நாமனைவரும் செயற்பட வேண்டியுள்ளது