பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் பலி

தமிழ் ​செய்திகள் இன்று


பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் பலி

மொனராகலையில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, இத்தேகட்டுவ பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை கைது செய்ய காவல் துறை அதிகாரிகள் இன்று விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.

இதன்போதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.