ரியாஸ் நானாவின் உதவியாளர்கள் 13 பேர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


ரியாஸ் நானாவின் உதவியாளர்கள் 13 பேர் கைது

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வர்த்தகர் ரியாஸ் நானாவின் சகாக்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரியளவிலான போபை்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரியாஸ் நானா என்வரின் உதவியாளர்களாக பணியாற்றிய 13 பேரை தலாதுஓய ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கண்டி-ரத்தெனிகல-மகாவலி ரஜமாவத்த-குருதெனிய பகுதியில் வைத்து ஒருவர் சந்தேகமான முறையில் நடமாடிய போது கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபரிடமிருந்து 1 கிராம் வீதம் பொதியிடப்பட்டிருந்த 40 ஹெரோயின் பக்கட்டுக்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விளக்கமறியில் உள்ள ரியாஸ் நானாவின் ஆலோசனைக்கு அமைய குறித்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபரிடம் போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வருகைத் தந்திருந்த மேலும் 12 பேரையும் காவல்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் கைது செய்தனர்.

அவர்களில் இருவர் கண்டி-கட்டுகஸ்தொட பகுதியில் வசித்து வருவர்கள் என்பதோடு குருநாகல் பகுதியில் உள்ள 23 வயதுடைய பெண்ணொருவரும் மேற்படி சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.