வௌிநாடுகளில் உள்ள 20 வீதமான இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்

தமிழ் ​செய்திகள் இன்று


வௌிநாடுகளில் உள்ள 20 வீதமான இலங்கையர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்

வௌிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களில் 20 வீதமானவர்கள் தமது தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் தொழில் செய்யும் இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் நிலையை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் பட்டுவத்த இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் மற்றும் குவைட் நாடுகளில் உள்ள இலங்கையரே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

பெரும்பாலும் கட்டுமானத்துறை சார்ந்தவர்களே இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.