அதிவலு மின்சார கம்பி அருந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


அதிவலு மின்சார கம்பி அருந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்கள்

மாத்தளை, மஹவெல, ஹதமுனகல பிரதேசத்தில் அதிக வலு கொண்ட மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதுடன், மரத்துடன் சேர்த்து மின் கம்பியும் அருந்து விழுந்துள்ளது.

இதனால் அவர்கள் மீது அதி சக்திவாய்ந்த மின்சாரம் பய்ந்து உயிரிழந்துள்ளனர்.

மூன்று இளைஞர்கள் ஒன்றாக பயணித்துள்ளதுடன், மரம் முறிந்து விழும் போது ஒருவர் லொறியில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.

23 மற்றும் 27 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.