கனடா பிரதமரின் மற்றொரு மனித நேய செயல் – குவியும் பாராட்டுக்கள்

தமிழ் ​செய்திகள் இன்று


கனடா பிரதமரின் மற்றொரு மனித நேய செயல் – குவியும் பாராட்டுக்கள்

கனடாவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அமெரிக்க பொலிஸரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜோஜ் பிளாய்ட் இற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்த நபர் பொலிஸரால் கொல்லப்பட்டதற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி கனடாவின் ஒட்டாவாவில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டிருந்தார்.

பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜஸ்டின் ட்ரூடோ பேரணியில் இணைந்து நடந்து வந்தார்.

இது அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்தது. அவருடன் சோமாலிய வம்சாவளி மந்திரியான அகமது உசேனும் பேரணியில் பங்கேற்றார்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூடவேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் எச்சரித்திருந்த நிலையில், பேரணியில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.